செய்துங்கநல்லூர் நூலககத்தில் குடியரசு தினவிழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் வாசகர் வட்டத்தினை சேர்ந்த ஜீவா, ரயில்வே ரஜேந்திரன், அஞ்சல் துறை செல்லப்பா, தோனி அப்துல், தோனி முகைதீன், வார்டு உறுப்பினர் அபு , நவாஸ், ஊராட்சி செயலர் சங்கரபாண்டியன், சமூக சேவகர் முத்துலெட்சுமி, மக்கள் நலப்பணியாளர் பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


