தூத்துக்குடி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தின் PMDK பிரதம மந்திரி திவ்வாஷ் கேந்திரா மையம் மூலம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் அடையாள அட்டை வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உபகரணங்கள் (MSIED Kit) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மூன்று சக்கர சைக்கிள் (கையில் இயக்க கூடியது), சக்கரநாற்காலி, காதொலிகருவி (காதுக்கு பின்புறம் வைக்கும் கருவி), நடைகருவி, பிரையலிகேன், மடக்கு ஊன்று கோல் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டர்களுக்கான தினசரி பயன்பாட்டு உபகரணங்கள் செல்பேசி (ADL Kit & Cell பார்வையற்றவர்களுக்கான phone டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் போன், பார்வையற்றோருக்கான நவீன அதிரும் மடக்குகுச்சி, பேட்டரி பொருத்திய மூன்று சக்கரசைக்கிள்,
சக்கரநாற்காலி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தேவையான சிலிக்கான் போம் முதுகு தண்டுவட குஷன் மடக்குகுச்சி சக்கரநாற்காலி கமோடு உடன் கூடிய நாற்காலி, காது கருவிகள், வாக்கர், எல் எஸ் பெல்ட், முழங்கால் பெல்ட், கழுத்து காலர் போன்ற உபகரணங்கள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான மதிப்பீட்டு முகாம்கள் 25.11.2025 அன்று விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 26.11.2025 அன்று சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 27.11.2025 அன்று கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 28.11.2025 அன்று புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், 29.11.2025 அன்று தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளி, போல்பேட்டை, 01.12.25 அன்று ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


