தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார்.
தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஆதிபராசக்தி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் இன்று 25.11.26 பார்வையிட்டார்.
மேலும், மாவட்ட தொழில் மையம் அருகில் உள்ள செங்குளம் ஓடை வழியாக மழைநீர் செல்வதை பார்வையிட்டார். ஆய்வின்போது, மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.


