வல்லநாடு இளைய சித்தர் தவத்திரு சாதுசிவா சுவாமிகள் ஐந்தாம் ஆண்டு -குருபூஜை விழா ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பெருங்குளத்தில் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு அபிசேகம், 7 மணிக்கு கூழ் பூஜை, 8மணிக்கு அகவல் பாராயணம், 9மணிக்கு சமத்துவ விருந்து 12 மணிக்கு குருபூஜை நடைபெற்றது. குருபூஜையை யொட்டி சுவாமி பத்மேந்திரா சிறப்புரையாற்றினார். வடலூர் தெய்வநிலைய அறங்காவலர் குழு உறுப்பினர் வில்லிசை வேந்தர் கிஷோர் குமார், முத்துக்குமரன் ஆகியோரால் காலை அகவல் பாராயணமும் மழையூர் சதாசிவம் அய்யா அருட்பா இன்னிசை நடைபெற்றது. மாலை 5.30மணிக்கு கோ பூஜையும் 6 மணிக்கு நவக்கிரக ஜோதி வழிபாடும் நடை பெற்றது. முன்னாள் காவல் துறை ஐ.ஜி மாசானமுத்து முன்னிலை வகித்தார்.

சொக்கேந்திரன் அய்யா, நாகர்கோவில் அல்போன்ஸ் அய்யா, பொறியாளர் கணேசன், பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ்தேவர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் மதுரை சந்திரன், நாங்குநேரி அரசு வழக்கறிஞர் பாலசுந்தர், பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு முன்னாள் செயலாளர் முத்துராமலிங்கம், பாஜக நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் சண்முகராஜா, திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வள்ளியூர் ஆதிபாண்டி, அமமுக ஒன்றிய கழக செயலாளர்கள் முருகன்,கருணாநிதி, நகர செயலாளர் சிவராமலிங்கம், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பரிசமுத்து, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணை தலைவர் சண்முகசுந்தரம், முன்னாள் பேரூராட்சி நிர்வாக அதிகாரி பொன்பாண்டியன், இசா அன்னதான அறக்கட்டளை மீரான்குளம் முத்துராமன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ஆன்மீக பெரியோர்கள் சன்மார்க்க சான்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சாது சிதம்பர சுவாமிகள் தொண்டர்குலத்தினர் மற்றும் வக்கீல் சங்கரலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


