தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் வருகிற 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் 18வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி, சாத்தான்குளம், ஏரல், திருச்செந்தூர், ஸ்ரீ வைகுண்டம் வட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கடையுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கடத்துதல், மதுபானத்தைப் பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.


