செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான லெட்சுமி நரசிம்மர்கோயில் உள்ளது. மூலஸ்தானத்தில் நரசிம்மர் மடியில் லட்சுமி அமர்ந்து இருப்பது போல் விளங்கும் ஓரிரு கோயில்களில் இந்த கோயில் முதன்மையானது. இந்த கோயிலில் பூஜைகள் சரியாக நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையில் தற்போது அறநிலை துறை சார்பாக இந்த கோயிலுக்கு அர்ச்சகர்கள் பணி நியமனம் செய்துள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் முத்தாலங்குறிச்சி நரசிம்மா குழுவினர் சார்பில் மாதந்தோறும் சுவாதி திருவிழாவை முன்னிட்டு திருமஞ்சனம் நடைபெற்ற வருகிறது.
இந்த மாத ஆடி சுவாதி திருமஞ்சனத்தினை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டது. லெட்சுமி நரசிம்மர், ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. கோயில் பக்தர்கள் நரசிம்மர் பராயணம் செய்தனர். அதன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயில் அர்ச்சகர் சேகர், நிகழ்ச்சி பொறுப்பாளர் சோமசுந்தரம், நாரயண ராமனுச தேசன், அறங்காவலர் வள்ளி நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கோயிலில் நின்று போன பிரதோச வழிபாடு நடைபெறு பக்தர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.


