தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு பொருட்காட்சி திடலை எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலய திருவிழா வரும் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆக.05ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பனிமய மாதா பேராலயத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சி திடலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


