தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலூக்காவிலுள்ள சேரகுளம் கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.. இக்கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் நெல், வாழை, உளுந்து, பருத்தி போன்றவைகளை விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயம் மட்டுமல்லாமல் கால்நடைகளையும் அதிகமாக வளர்த்து வருகின்றனர் குறிப்பாக கறவை மாடு, வெள்ளாடு, மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றனர். காலநிலைக்கேற்ப கால்நடைகளை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. மழை காலங்களிலும் கோடை காலங்களிலும் பல்வேறு நோய்கள் கால்நடைகளை தாக்குகிறது. இதுவே கால்நடை விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. அந்த காலகட்டங்களில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நோய்களை பாதுகாப்பத்திற்க்கான ஆலோசனைகளை பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக வழங்கி வருகிறது. கால்நடைத்துறையின் முன்னாள் இணை இயக்குனர் மற்றும் மருத்துவர் கணபதி இக்கிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவம் அளித்தார். குடல் புழு மருந்து கொடுத்தல் , சினை பரிசோதனை மற்றும் நோய்களுக்கு சிகிச்சை அளித்தல் போன்ற செயல்பாடுகள் முகாமில் நடைபெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் 250 க்கும் அதிகமான கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.


