கவுண்டமணி பிறப்பு: மே 25. ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.
கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் மே 25, ஆம் தேதி கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். தற்போது இந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால். திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி (Counter) கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம். அதனால் அவரை கவுண்டர்மணி என சக நடிகர்கள் அழைத்தனர். பின்னர் 16 வயதினிலே படம் நடிக்கும்போது அவருக்கு அந்தப் பெயரையே டைட்டிலில் பயன்படுத்த வைத்தவர் இயக்குநர் கே பாக்யராஜ். அந்தப் படத்திலிருந்துதான் அவர் கவுண்டமணி என்ற பெயரில் அழைக்கப்பட்டார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.


