தூத்துக்குடியில், கரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றிய பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஊர் மக்கள் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி, பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் மற்றும் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஆனந்த் சாமுவேல் ஜான் தாமஸ் தலைமை தாங்கி ஜெபித்து ஆண்டு விழாவை ஆரம்பித்து வைத்தார். தூத்துக்குடி ஊரகம், வட்டாரக் கல்வி அலுவலர்கள் அஜயபாலன் துரைராஜ் தேவாசீர், ஜெசுராஜன் செல்வக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மேற்பார்வையாளர் சார்லஸ், ஆசிரியர் பயிற்றுநர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் அஜயபாலன் துரைராஜ் தேவாசீர், ஜெசுராஜன் செல்வக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மேற்பார்வையாளர் சார்லஸ் ஆகியோர் பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்திப் பேசினர். ஆண்டறிக்கையை இடைநிலை ஆசிரியை பெல்சிபாய் ஆண்டறிக்கையை வாசித்து சமர்ப்பித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு காலமான 2 ஆண்டுகள் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்த காலத்தில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள் வீடு வீடாக வந்து மூன்று பருவ பாடத் திட்ங்களையும் நிறைவு செய்து கல்வியில் தேக்கம் இல்லாமல் பணி செய்ததையும். சொந்த செலவில் பள்ளிக்கு கட்டடம் கட்டிக் கொடுத்ததையும் பாராட்டி ஊர்மக்கள் அனைவரும் தலைமையாசிரியருக்கு “இல்லம் தேடி கல்வி தந்தவர் எங்களின் விடிவெள்ளி – சேவைச் செம்மல் நெல்சன் பொன்ராஜ்” என்ற வாசகம் பொரித்த கேடயத்தை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் வழங்கினர்.
விழாவில்வரலாற்று நிகழ்வுகள் ஒலி, ஒளி நாடகமாக மாணவர்களால் நடித்து காண்பிக்கப்பட்டது. தாளாளர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தலைமையாசிரியர்கள் சந்திரா, பியூலா ஞான தங்கம், சேகர், மாரிமுத்து, செந்தட்டி, ஹெரால்டு வில்சன், ஞானதுரை, ஜாண் ஐசக், ஜெபராஜ், சகாயராஜ், மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ஷியாம்ராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், ஊர் பொது மக்கள் திராளானோர் கலந்து கொண்டனர்.


