தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நீடித்த நிலையான வளர்ச்சிகள் இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் அங்கமங்கலம் கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் பஞ்சாயத்து தலைவர் திருமதி பா. பானுப்பிரியா பாலமுருகன் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலமைச்சரின் வாழ்த்து செய்தியை படித்து சிறப்புரையாற்றினார்.மேலும் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி, மரக்கன்றுகளைநட்டு, மனுக்கள் பெற்றுக்கொண்டார். இதில் ஒன்றிய குழு தலைவர் ஜனகர் ஆவின் தலைவர் சுரேஷ்குமார் ஒன்றிய கழகச் செயலாளர் நவீன் குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி மேலஆத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ்குமார் கல்லை சிந்தா நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பரிசமுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஒன்றிய ஆணையாளர் பாலசுப்ரமணியன் ஒன்றிய பொரியார்ளர் வெல்லப்பாண்டி சமூக ஆர்வலர் பாலமுருகன்
மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்


