*தூத்துக்குடியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட தன்னார்வளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கினார்கள்*
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ஆம் நாள் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த தினத்தை அனுசரிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் செவிலியர் பயிற்சி பள்ளியில் வைத்து இன்று (24.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.*க.இளம்பகவத்,* இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
துணை இயக்குனர் மருத்துவ பணிகள் காசநோய் டாக்டர் *க.சுந்தரலிங்கம்* அவர்கள் திட்ட விளக்க உரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நமது வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட
காசநோயாளிகளுக்காக சத்துணவு பொருட்கள், உணவுப் பொருட்கள், உயர்ரக புரோட்டின் பவுடர், புத்தாடைகள் காச நோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கிய கீழ்க்கண்ட மூன்று நிறுவனங்களுக்கும், காசநோய் இல்லாத பஞ்சாயத்துக்கும் சான்றிதழ் மற்றும் விருது வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கௌரவித்தார்கள்.
1.Senior Sarahs and Alumni Association of Sarah Tucker College, Tirunelveli.
இவர்கள் சார்பாக இந்த விருதினை *சுகாதார பார்வையாளர்* திருமதி.*சுதா மணிமேகலை* அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்
2.AAA Engineering Consultants & Construction, Chennai & Tirunelveli.
இவர்கள் சார்பாக *முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்* திரு.*அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் பெற்றுக் கொண்டார்.
3.Hexagon Nutrition (International) Pvt Ltd., Thoothukudi.
இவர்கள் சார்பாக இந்நிறுவனத்தில் *மனிதவள மேலாளர்* திரு.*பா.சிவராஜ்* அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட *சேரகுளம் பஞ்சாயத்து* காசநோய் இல்லா பஞ்சாயத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஊராட்சி செயலாளர் திருமதி.*ஆ.ஆனந்தபாரதி* அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


