தொண்டர் நயினார் கோயிலில் தை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தர் பெருமாள் சிவபெருமானை பூஜித்த விழா நடைபெறும். சித்ரா பௌர்ணமி ஆனி உத்திரம் ஐப்பசி மாதம் கோமதி அம்பாள் திருக்கல்யாணம் திருக்கார்த்திகை மாத சோமவாரம் மார்கழி திருவாதிரை சிவராத்திரி திருவிழா உள்ளிட்ட விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கோயில் நடை தினமும் காலை 6:30 மணி முதல் 7:00 மணி வரைக்கும் மாலை 5:30 மணி முதல் இரவு எட்டு முப்பது வரை திறந்திருக்கும்.
தொண்டர்கள் நயினார் கோயில் நெல்லை டவுனில் நெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் அமைந்துள்ளது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து டவுன் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சென்று லாலா சமுத்திர முக்கு அருகில் உள்ள கோயிலை பார்க்கலாம். தரிசிக்கலாம்.
சிவன் சன்னதிக்கு முன்புறத்தில் திருஞானசம்பந்தர் அகத்தியர் இருவரும் உள்ளனர் பிரகாரத்தில் தெற்கு நோக்கி சனீஸ்வரர் தனியாக இருக்கிறார் இவர் வலது கையில் கிளி வைத்த கோலத்தில் இருப்பது தனி சிறப்பாகும் கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடியில் சங்கராச்சாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரும் எதிரே உறுப்பினரும் அமைந்துள்ளது மதுரை சுந்தரேஸ்வரர் தளத்தில் பெண் ஒருத்தியின் திருமணத்திற்கு லிங்கம், கிணறு ஆகியவை சாட்சி கூறியது. இதனை நினைவு கூறும் வகையில் இத்தளத்தில் வன்னி விநாயகர் பக்தர்களுக்கு காட்சி யளிக்கிறார். விநாயகரின் வலது புறத்தில் இரு சிவலிங்கமும் அதன் அருகில் இரு நாகங்கள் எதிர் திரும்பியபடி இருப்பது வித்தி யாசமான அமைப்பு திருமண நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் அதிகமாகும் இத் தளத்தில் அமைந்துள்ள தட்சிணா மூர்த்தி தனது இடது கையை நாகத்தின் மீது வைத்தபடி அமர்ந் துள்ளனர். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், முருகன் சன்னகளும் உள்ளது. இக்கோயிலில் சிவலிங் கத்தை நிறுவிய பின் திருஞான சம்பந்தரை உறுப்பினர் வெட்டி அதில் சிறந்த நீரைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய் தருளினார். தற்போதும் அந்த கிணற்று நீரை இங்கு சுவாமிக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
11.03.2024 அன்று மதுரை உயர்நீதி மன்றம் நான் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒன்று கொடுத்தது. அது என் வாழ்க்கையில் மட்டுமல்ல, தாமிர பரணி வாழ்க்கையிலும் கூட ஒரு திருப்பு முனை என நினைக்கிறேன்.
அதாவது தாமிர பரணியில் எங்கெங்கு சாக்கடை கலக்கிறது. அறிக்கை சமர்பிக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டனர்.
நான் (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு) தொடர்ந்த வழக்கில் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து மறுநாள் தினசரி பத்திரிக்கை இந்த செய்தி வெளிவந்திருந்தது. அந்த செய்தி விவரம் வருமாறு.
நான் மதுரை உயர்நீதி மன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கில் நெல்லை தூத்துக்குடி மாவட்டம் முக்கிய நீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கரம் விழா நடைபெறுகிறது. 2018 அக்டோபரில் மகா புஷ்கரம் நடந்தது. அந்த சமயத்தில் தாமிரபரணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள் படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கினை எனது சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி நடத்தினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் பி.புகழேந்தி ஆகியோர் பொதுப் பணித்துறை தலைமை பொறி யாளருக்கு உத்தரவிட்டனர். அந்த உத்தரவில் தாமிரபரணி ஆற்றில் அவர்கள் நேரில் கள ஆய்வு செய்ய வேண்டும். ஆற்றில் எங்கெல்லாம் கழிவுநீர் கலக்கிறது இதை தடுப்பது எப்படி என்பது குறித்து அறிக்கை யளிக்க வேண்டும் என்றும், அறநிலையத்துறை கமிஷனர் தரப்பில் எங்கெல்லாம் பழமையான மண் டபங்கள் உள்ளன. அவற்றை புதுப்பிக்க முடியுமா? அதற்கான சாத்திய கூறுகள் என்ன என்பது குறித்து அறிக்கையளிக்க வேண்டும் எனவும் இதே போல் படித் துறைகளை புதுப்பிக்க முடியுமா? அதன் சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து நெல்லை மற்றும் தாமிரபரணி கரையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 26 க்கு தள்ளி வைத்தனர்.
இந்த உத்தரவு தாமிரபரணி நதி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. விரைவில் தாமிரபரணி சுத்தமான நதியாக , பாரம் பரிய மிக்க நதியாக காப்பாற் றப்படும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
12.03.2024 பாளையங்கோட்டை ஜெயந்திரர் பள்ளியில் நம்தாமிரபரணி சார்பில் தாமிரபரணி பராமரிப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தாமிரபரணி ஆர்வலர்களை அழைத்து தாமிரபரணிக்கு என்ன செய்ய வேண்டும் என்று கருத்து கேட்டகப்பட்டது.
இதற்கிடையில் 16.03.2024 அன்று “மீண்டும் வேண்டும் தாமிரபரணி” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று பாளையங்கோட்டை , மருத்துவ மனை குடியிருப்பு அருகில் நடத்தினார்கள். இதில் நெல்லை யை சேர்ந்த துணை மேயர், பாப்புலர் முத்தையா , வழக்கறிஞர் அன்பு உள்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். எப்போதும் இல்லாமல் புதிய மக்களோடு தாமிரபரணி நிகழ்ச்சியில் பேசிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் கலந்து கொண்ட பிரமுகர்களிடம் “நெல்லை தூத்துக்குடி தொழில் அதிபர்களும், அரசியர் பிரமுகர்களும். ஒவ்வொரு கிலோமீட்டராக தத்து எடுத்து துப்புறவு செய்தால் கூட தாமிரபரணியை சுத்தம் செய்து விடலாம்” என பேசினேன். மேலும் வழக்கில் நாம் வெற்றி பெற்றாலும் கூட அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள் உதவியில்லாமல் நாம் வெற்றி அடைய முடியாது என வலியுறுத்தினேன். ஷிபா மருத்துவனை இயக்குனர் அய்யா, கண்டிப்பாக செய்வோம் என உறுதி அளித்துள்ளார். அனைவருக்கும் மிக்க நன்றி . ஏற்பாடு செய்த தம்பி சிராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். 19.03.2024 அன்று அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அவர்களிடம் எனது தவழ்ந்து வரும் தாமிரபரணி நூலை வழங்கி, தாமிரபரணியை தூத்துக்குடி மாவட்டத்தில் சுத்தப்படுத்தி நீர் கருவை செடிகளை அகற்ற உதவவேண்டும் என கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை அனிதா ராதா கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டதோடு, நாம் நிச்சயம் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் இதற்காக ஆவண செய்வோம் என்றார். மொத்தத்தில் தாமிரபரணியை பாதுகாக்க நமக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்து வருகிறது என நம்புகிறேன்.
(நதி வற்றாமல் ஓடும்)


