தூத்துக்குடி ரோச் பூங்காவின் இருபுறமும் வாக்கிங் டிராக் அமைக்கும் பணிகள் தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் மாநகர மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
அதன் ஒரு பகுதியாக ரோச் பூங்காவின் இருபுறமும் மக்கள் இயற்கையை ரசித்துக் கொண்டு நடைப்பயிற்சி செய்யும் வண்ணம் ஆரம்பமாகப் போகும் வாக்கிங் டிராக் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, பகுதி செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் ஆகியோர் உடனிருந்தனர்.


