சிவகளையில் அகழாய்வுப்பணிகள் நடந்த இடத்தினை பார்வையிட பள்ளிக்கல்வித்தறையின் இணை இயக்குநர் அருள்முருகன் நேரில் பார்வையிட வருகை தந்தார்.
அவர் சிவகளை பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தினை பார்வையிட்டார். பின்னர் அகழாய்வு பணிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டு ஆய்வுகள் குறித்தும், ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் தொல்லியல் ஆய்வாளர் பரத், பணியாளர் சுதாகர் மற்றும் கணேஷ் திருப்பதி ஆகியோர் விளக்கமளித்தனர்.
அவருடன் ஆசிரியர் மாணிக்கம் உள்பட பலர் உடன் வந்தனர்.


