தூத்துக்குடியில் பெரியாரின் 51-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகம் தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள பெரியாரின் திரு உருவசிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னஸ் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு பெரியார் சிலை முன்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணியினர், நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து காெண்டனர்.


