தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஜவுளி வாங்க பொதுமக்கள் அலைமோதி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் ஜவுளிகள் எடுக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களிலும் கூட்டம் காணப்படுகிறது.
திருச்செந்தூர், ஏரல் மற்றும் சென்னையில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கி வருகிறது. இங்கு பெண்களுக்கான சேலைகள், சுடிதார் உட்பட புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆடவர்களுக்கு பிரபல நிறுவனங்களின் ஷூட்டிங், சர்டிங், துனி வகைகள், மற்றும் குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் ஏராளமாக விற்பனைக்கு குவிந்துள்ளது.
மேலும் இளைஞர்களை கவரும் வகையில் புதுப்புது டிசைன்களில் ரெடிமேட், பேண்ட் சர்ட் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்து விதமான ஜவுளி வகைகளும் ஒரே இடத்தில கிடைப்பதால் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விற்பனை களை கட்டியுள்ளது. ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


