நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டி போட்ட தாமிரபரணி வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்பை கடந்த மூன்று நாள்களாக கனிமொழி எம்.பி பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார். இவர் முத்தாலங்குறிச்சி கிராமத்துக்கு வருகை தந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் கனிமொழியின் சேவையை கை தட்டி பாராட்டி உற்சாக படுத்தினார்கள். இதுகுறித்து இந்த ஊரை சேர்ந்த பெண்கள் கூறும்போது, கடந்த 1992 புயல் வெள்ளத்தின் போது எங்கள் ஊர் மக்கள் வெளியே வர 10 நாள்களை தாண்டியது. ஆனால் தற்போது அரசு முயற்சியில் தொடர்ந்து இரண்டாவது நாளே படகு மூலம் எங்கள் மக்களை மீட்டதோடு, தொடர்ந்து மின்சாரம் தந்து நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். ஊருக்கு வரும் சாலையில் உள்ள பெரும் உடைப்பை சீர் செய்து போக்குவரத்து ஏற்பாட்டை செய்துள்ளார்கள். மேலும் நிவாரண பொருள் தங்குதடையின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். கடந்த 1992 ல் மழை வெள்ளத்தின் போது எந்த எம்.பியும் . எம்எல்ஏவும், அமைச்சர்களும் எங்கள் ஊருக்கு வரவில்லை. தற்போது கனிமொழி எம்.பி. வருகை தந்த காரணத்தினால் அனைத்து அமைச்சர்களும், அரசு அலுவலர்கள் எங்கள் ஊர் மட்டுமல்லாமல் தாமிரபரணி வெள்ளம் பாதிக்கப்பட்ட எங்கள் ஊரை பார்வையிட வந்துள்ளனர். விரைவில் பஸ் போக்குவரத்தை துவங்குவதாக வாக்களித்துள்ளார். எனவே அவரை பாராட்டினர். மேலும் தங்கள் ஊருக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் படித்துறை கட்டி தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். படகு மூலம் மக்களை வெளியே கொண்டு வர உழைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ சண்முகையா, சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட உதவியவர்களை வெகுவாக பாராட்டினார்கள். அந்த ஊரில் பாம்படம் அணிந்த பெருமாத்தாள் என்பவரை அழைத்து அவரோடு உரையாடி மகிழ்ந்தார் கனிமொழி எம்.பி.

தொடர்ந்து மக்களுக்கு தேவையான பொருள்களை கனிமொழி எம்.பி வழங்கினார். அவர் அதன் பின் அவர் ஆழிகுடி, சென்னல்பட்டி, ஆறாம்பண்¬,ண , கொங்கராயகுறிச்சி உள்பட பல ஊருக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்த்த ராஜ், சேர்மன் கோமதி ராஜேந்திரன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் ராஜா, கருங்குளம் ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி,இசக்கிபாண்டியன் உள்பட பலர் உடன் சென்றனர்.


