தூத்துக்குடியில் வருகிற 28ம் தேதி (செவ்வாய்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை பதிவு, மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்திரவின் படியும், துாத்துக்குடி வட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குறைதீர்ப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல் UDID CARD பதிவுசெய்தல் சிறப்பு முகாம் மற்றும் மருத்துவ சிறப்பு முகாம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் டூவிபுரத்தில் அமைந்துள்ள மக்கள் நலமண்டபத்தில் வைத்து 28.12.2021 (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணியளவில்நடைபெறவுள்ளது. தூத்துக்குடி வட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை இச்சிறப்பு முகாமில் நேரடியாக கலந்து கொண்டு தீர்வு பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


