தூத்துக்குடியில் உள்ள ஏ.வி.எம் கமலவேல் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது நாளை (23.11.2022)காலை 10 முதல் -1 மணி கருங்குளம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின்
கலைதிறன் நிகழ்ச்சிகள் நடைபெறுவுள்ளது. அதன் பின் பிற்பகல் 3 மணிமுதல் 5 மணி வரை எட்டயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடனம் நடைபெறுகிறது. அதன் பின் -பாரதியார் பாடல்கள் பாடப்படுகிறது. தொடர்ந்து தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரம்பரிய நடனம்’ நடைபெறும். தொடர்ந்து தூத்துக்குடி புனித சிலுவை மனையியல் கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாலை 5 முதல் -6 மணி வரை ஆரைக்குளம் மாரியப்பன் வழங்கும் கணியான் கூத்து நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு சாகித்ய அகாடமி விருதாளர் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தமிழ் – வரலாறும் தொண்மையும் என்ற தலைப்பில் பேசுகிறார். தொடர்ந் தமிழ் இலக்கிய பெருவெளியில் பெண் குரல் என்ற தலைப்பில் கவிஞர் கவிதா முரளீதரன் பேசுகிறார்.
நிகழ்ச்சியை முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் க.சரவணகுமார் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சி அமைப்பை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் செய்து வருகிறது.


