தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று அமைச்சர் பேசினார்.
தூத்துக்குடி – சண்முகபுரம் வடக்கு பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்னிசை நிகழ்ச்சியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து பேசுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு 2 ½ ஆண்டுகளில் அறநிலைத்துறை சார்பில் 1,000 கோவில்களில் கும்பா பிஷேகம் நடைபெற்றுள்ளது. அதே போல் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான அறநிலைய துறைக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
எல்லா மதத்ததையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மதவெறியைதான் வெறுக்கிறோம். தி.மு.க. ஆட்சி வந்தபிறகு எல்லா கோவில்களிலும் எல்லா நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் நடைபெறுகிறது. அதே போல் வியாபாரிகளுக்கு இரவு 10 மணி வரை கடைகள் இயங்கலாம் என்று இருந்ததை அவர்களது கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மணி வரை கடைகளை திறந்திருப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். இப்படி தமிழகத்தில் எல்லா துறைகளிலும் நல்ல வளர்ச்சியடைந்து பொருளாதார நிலை உயர்ந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவிற்கு இளைஞர் அணி ஓருங்கிணைப்பாளரும் தி.மு.க. வட்டச்செயலாள ருமான பொன்ராஜ், தலைமை தாங்கினார். அமைப்பாளர்கள் முத்து மாரியப்பன், சுரேஷ், முத்துக்கு மார். ராஜேஷ், செல்வசுபாஷ், சூரியகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் பேபி ஏஞ்சலின் வரவேற்று பேசினார். விழாவில் தி.மு.க. செயலாளர் மாநகர ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், உள்பட பக்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


