“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தமிழ்நாடு அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், இன்று (24.07.2024) தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் முறம்பன்குளம் கிராமத்தில் உள்ள முறம்பன்குளத்தில் நீர்வளத்துறையின் மூலம் ரூ.36 இலட்சம் செலவில் நடைபெற்றுவரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மேற்பார்வைப் பொறியாளர் (தாமிரபரணி வடிநில வட்டம்) சிவக்குமார், செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், முறம்பன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் தேன்மொழி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


