கோவில்பட்டியில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீசார் இலுப்பையூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்குள்ள மாடசாமி கோயில் அருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடிக்க முயன்றபோது அவர் போலீசாரை அவதூறாக பேசிக் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இந்நிலையில் போலீசார் அவரை பிடித்து கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் இலுப்பையூரணி மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் உத்தண்டை (24) கைது என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


