தூத்துக்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் ஆதித்யா மகன் முருகேசன் (60). இவர் அண்ணா நகர் 7வது தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு இன்று காலை திறக்க வந்துள்ளார். அப்போது ஷட்டரில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.1லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து முருகேசன் அளித்த தகவலின் பேரில், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்குநேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
இதுபோல் தாளமுத்துநகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூ.5ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


