இடமாற்றத்திற்காக ஆசிரியர்களிடம் வசூல் செய்வதாக வட்டார கல்வி அலுவலர்களை கண்டித்து ஓட்டப்பிடாரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக இடமாற்றத்திற்காக ஆசிரியர்களிடம் வசூல் செய்வதை கண்டித்தும், தவறுகளை தட்டிக் கேட்கும் ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வட்டார கல்வி அலுவலர்கள் பவனந்தீஸ்வரன், மகாலட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் பசுபதி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் அண்டனி சார்லஸ், ஆனந்தி, மாவட்ட பொருளாளர் ஜெயசீலி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார துணை செயலாளர் முத்துவேல்சாமி வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து மாநில செயலாளர் ராஜ்குமார் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சகாயராஜ், வட்டார செயலாளர் கோபால்சாமி, மாவட்ட செயலாளர் கலை உடையார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செல்வின் சாமுவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.


