தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆழப்படுத்தும் பணிகளுக்காக தூர்வாரப்பட்ட மண் வளங்களை வீணாக்காமல் அதனை பயன்படுத்தி நிலையான நிலப்பரப்பாக மாற்றப்பட்டுள்ளது….
இதுகுறித்து துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் வடக்குசரக்கு தளம் – 3-ல் 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக மேற்கொள்ளப்பட்ட ஆழப்படுத்தும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும் துறைமுகத்தின் உள்துறைமுக பகுதியில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையினை 488 மீட்டரிலிருந்து 550 மீட்டராக ஆழப்படுத்தி விரிவுபடுத்தி உள்ளது.
இந்த ஆழப்படுத்தும் பணி 05.04.2025 அன்று துவக்கப்பட்டு 16.05.2025 அன்று முடிக்கப்பட்டது. இதன் மூலம், பெரிய வகை சரக்கு கப்பல் மற்றும் சரக்குபெட்டக கப்பல்களை கையாளும் வசதியை துறைமுகம் பெற்று சரக்கு கையாளும் திறன் மேம்பாட்டிற்காக மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இந்த ஆழப்படுத்தும் பணியின் மூலம் தூர் வாரப்பட்ட மண் வளங்களை வீPணாகவிடாமல் அவைகளைப் பயன்படுத்தி துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கின் அருகிலும், காற்றாலை இறகுகளைச் சேமித்து வைக்கும் கிடங்கின் கிழக்கிலும் உள்ள நீர்ப்பரப்பை நிலப்பரப்பாக மாற்றியுள்ளது.
சுண்ணாம்பு கலந்த மணல் பொருட்கள் மற்றும் கால்காரனைட் (ஊயடஉயசநnவைந) ஆகியவை அடங்கிய 8,00,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தூர் வாரப்பட்ட மண் வளங்களை பயன்படுத்தி சரக்குகளைத் திறம்பட சேமிக்கப் பயன்படும் 11.5 ஹெக்டேர் புதிய நிலப்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, ஆழப்படுத்தும் பணியின் மூலம் தூர் வாரப்பட்ட மண் வளங்களை கழிவுப் பொருட்களாகவே கருதப்பட்டு வருகின்றது. ஆனால் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ‘கழிவிலிருந்து செல்வம்’ என்னும் புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தி, தூர் வாரப்பட்ட மண் வளங்களைக் கொண்டு நிலப்பரப்புகளை உருவாக்கி, அந்நிலப்பரப்புகளை சரக்குத் தளங்களாகவும், சேமிப்புக் கிடங்குகளாகவும் அமைத்துள்ளது.


