தூத்துக்குடியில் வீட்டிற்குள் நுழைந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி எப்சிஐ குடோன் எதிரே திருவிக நகரில் விக்னேஷ் என்பவரது வீட்டில் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. பாம்பை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் பதறியடி வெளியே வந்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு யோகமணி சங்கர், மெக்கானிக் தவசி மற்றும் தஉ ஏட்டு சக்திவேல், அஜித், விஸ்வநாதன் ஆகிய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு வீட்டின் முன்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த விறகுக் குவியலில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்து துரிதமாக பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்களை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.


