தென்னிந்தியாவின் சிறப்பு மிக்க கலையாம் களரி அடிமுறையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலக களரி அடிமுறை கூட்டமைப்பினர் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். முனவைர் ரமேஷ் ரத்தின குமார் இந்த கூட்டமைப்பின் நிறுவனராக இருந்து, உலக நாடுகளில் 24 நாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு களரியை தமிழகத்தில் தடை செய்த ஆங்கிலேயர்களின் தலைமை இடமான இங்கிலாந்தில் களரி சாம்பியன் ஷிப் போட்டியை நடத்தினார். அதை தொடர்ந்து 24 நாடுகளில் களரி அடிமுறை சாம்பியன் ஷிப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. களரி அடிமுறையை உலகமெங்கும் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த மாதம் இந்திய களரி அடிமுறை கூட்டமைப்பு சார்பில் கோயம்புத்தூரில் களரி அடிமுறை முதன்மை அலுவலர் முனைவர் செந்தில் ராஜ் குமார் தலைமையில் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன் ஷிப் வழங்கப்பட்டது.
நேற்று 23.03.2024 அன்று ஆஸ்திரிலேயாவில் களரி சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. ஆஸ்திரிலேயா வெண்ட் வொர்த் விலில் , ரெட்கெம் பங்சன் சென்டலில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 7 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் களரி அடிமுறை போட்டியில் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் சுவடு, சிலம்பம், வேல்கம்பு, போன்ற களரி அடிமுறை விளையாட்டுக்கள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன் ஷிப் வழங்கப்பட்டது. உலக களரி அடிமுறை கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ரமேஷ் ரத்தினகுமார் , இணை இயக்குனர் மற்றும் செயலாளர் பரத் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டுரை நிகழ்த்தினார்கள். முனைவர் வள்ளி சிறப்பு விருந்தினாக கலந்துகொண்டார். முனைவர் சந்திரிகா சாம்பியன் ஷிப் பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஆஸ்திரிலேயா களரி அடிமுறை கூட்டமைப்பு தலைவர் லாரன்ஸ் அண்ணாத்துரை பன்னீர் செல்வம், செயலாளர் இளமாறன் என்ற இஸ்மாயில் மீரான் ஆகியோர் செய்திருந்தனர்.
தொடர்ந்து மற்ற நாடுகளிலும் களரி அடிமுறை கூட்டமைப்பு சார்பில் களரி போட்டி நடத்தப்படும். இறுதியில் உலக அளவில் களரி சாம்பியன் ஷிப் போட்டி நடைபெறும் என உலக களரிஅடிமுறை கூட்டமைப்பு நிறுவனர் முனைவர் ரமேஷ் ரத்தினகுமார் கூறினார்.
இந்தியாவின் தென்கோடியில் மிகவும் பழமையான களரி அடிமுறை தற்போது உலகமெங்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பது இந்தியர்களான நமக்கெல்லாம் பெருமையாகும்.


