தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பணிக்கநாடார் குடியிருப்பு அரசு உதவி பெறும் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராமன். 42 வயதான இவர் கடந்த 6 மாத காலமாக தான் இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ராமன் பாலியல் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயம் மாணவியின் தாயாருக்கு தெரிய வரவே மாணவியின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அறிவியல் ஆசிரியர் ராமன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆசிரியர் ராமன் தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


