வெம்பூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, இராமசாமிபட்டி, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தி ஈடுபட்டு வருகிறது.
இதனை கண்டித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று முன்னாள் ஊராட்சி தலைவர் திருப்பதி தலைமையில் ஊர் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் தங்களை கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


