செய்துங்கநல்லூர் அருகில் உள்ள எஸ். என்.பட்டி திருமண மண்டபத்தில் உயர்கல்வி மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நாளை 25 ந்தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் திருச்சி சேர்ந்த கிரேஸி இமானுவேல் கலந்துகொண்டு, மேல் கல்வி படிப்பு எப்படி படிப்பது. எதை தேர்ந்தெடுப்பது. வேலை வாய்ப்பு சம்பந்தமான திட்டம் வகுத்து கொடுத்தல், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் கல்வி குறித்து ஆலோசனை, ஏழை எளிய மாணவ மாணவியருக்கு உதவி கரம் நீட்டி படிப்பை தொடர வைப்பது உள்பட கல்வி ஆலோசனை கூறப்படும். அரசு கல்விக்காக செய்து கொடுக்கும் திட்டங்களை எப்படி பெறுவது, சலுகைகளை தெரியப்படுத்துவது. யார் யாருக்கு எந்த கல்வியை அரசு சலுகை மூலம் பெறலாம் என்பது குறித்து இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. எனவே செய்துங்கநல்லூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பயிற்சியில் தவறாமல் கலந்துகொண்டு உதவி பெறுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரிதாபங்கள் யூடியுப் நடிகர் கதிர்வேல் மாதவன் செய்து வருகிறார். தொடர்பு எண் & 9789804016


