தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு முன்பதாக அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்விளக்கை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 3சென்ட் அந்தோனியார்புரத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு முன்பதாக மின்விளக்கு வசதி வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சோலார் விளக்கு அமைக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்க்காக மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
மேலும், அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மேயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட செயலாளர் மூக்கையா, மாமன்ற உறுப்பினர் வைதேகி, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


