செய்துங்கநல்லூரில் மர்மகாய்ச்சல் பரவி வருவதால் சுதாதார துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
செய்துங்கநல்லூர் ரயில்வே பீடர் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகள் கோமதி (வயது 10). கடந்த வாரம் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் பாளை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு குணமடைந்துள்ளார். இதே போல் இத் தெருவை சேர்ந்த சிலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்த வருவதாலும், அதை தடுக்க தூத்துக்குடி மாவட்ட சுதார துணை இயக்குனரின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதே செய்துங்கநல்லூரிலும் பணி நடந்தது.
செய்துங்கநல்லூரில் பஞ்சாயதது தலைவர் பார்வதி நாதன் தலைமையில் செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் மாஸ் கிளினிக், கொசு மருந்து தெளித்தல், காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசன், ஷர்பின் மற்றும் சுதாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். பஞ்சாயத்து மூலமாக துப்புறவு பணி மற்றும் சாக்கடை தேங்கும் இடங்களில் மண் அடித்து பள்ளங்களை நிரப்புதல் போன்ற அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து காய்ச்சலை தடுக்கும் விதமாக மக்களுக்கு நலக்கல்வி அளிக்கப்பட்டது.


