தூத்துக்குடி மாநகராட்சியில் மழை நீர் அகற்றும் பணிகள் தொடர்பாக அமைச்சர் நேரு தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளதை தொடர்ந்து மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் நேரு தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய பகுதிகள், கூடுதலாக பம்ப் தேவைப்படும் பகுதிகள், மின்சாரம் மற்றும் உணவு வழங்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. உடன் முதன்மை செயலாளர் கார்திக்கேயன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.


