மோல் நாள் என்பது வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும். இந்நாளை அவர்கள் அமெரிக்க முறையில் 6:02 10/23 எனக் குறிக்கிறார்கள். நேரம், நாள் ஆகியன அவகாதரோ மாறிலியைக் (6.02×1023) கொண்டு குறிக்கப்பட்டது. அவகாதரோ மாறிலி என்பது ஒரு மோல் வேதிப் பொருளில் காணப்படும் துணிக்கைகளின் எண்ணிக்கை ஆகும்.
1980களில் த சயன்சு டீச்சர் என்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் முதற்தடவையாக மோல் நாள் பற்றிய கருத்து வெளியிடப்பட்டது. இக்கட்டுரையினால் ஈர்க்கப்பட்ட மோரிசு ஓலெர் என்ற விஸ்கொன்சின் மாநில வேதியியல் ஆசிரியர் 1991 மே 15 ஆம் நாள் தேசிய மோல் நாள் நிறுவனத்தை ஆரம்பித்தார்.


