தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மகாராஜன். இவர் தூத்துக்குடி அண்ணாநகரில் இயங்கி வரும் எக்விடாஸ் தனியார் வங்கியில் கடந்த 2014ம் ஆண்டு டாரஸ் லாரிக்கு வாகன கடனாக ரூபாய் 6 லட்சம் வாங்கியிருந்தார். இதற்காக மாதம் ரூபாய் 20 ஆயிரம் தவணை கட்டி வந்துள்ளார். முதல் 4 மாதங்கள் மட்டுமே கட்டிய மகாராஜன் அதன் பின் கடன் தொகையை கட்டவில்லை.
இந்த நிலையில் எக்விடாஸ் வங்கி தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் மகாராஜன் மீது 2017ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தூத்துக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா பணமோசடி செய்து வங்கிக்கு இழப்பை ஏற்படுத்திய மகாராஜனை கைது செய்ய உத்தரவிட்டார்.
இவரது உத்தரவின் பேரில் மகாராஜனை நேற்றைய தினம் கைது செய்து திருச்சி சிறையில் நீதிமன்ற ஊழியர்கள் அடைத்தனர்.


