செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கொங்கராயகுறிச்சி காமராஜர் சிலை அருகில் திமுகவை கண்டித்து பி.ஜே.பி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சக்தி கேந்திரா பொறுப்பாளர் மற்றும் பி.ஜே.பி. ஒன்றிய பொதுச்செயலாளர் செல்வின் துரை தலைமை வகித்தார். அரசு தொடர்ப்பு ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், கர்ப்பிணி பெண்களுக்கு நிறுத்தப்பட்ட உதவிதொகையை திரும்ப வழங்க கோரியும், மது விலக்கை அமல் படுத்த கோரியும், பாரபட்சம் இன்றி அனைத்து குடும்பத்தலைவிக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர் செல்வின் துரை, முருகேசன், கட்சி உறுப்பினர் மணி, கணேசன், முருகேசன், நாராயணன், கணேஷ், சுந்தரம், முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



