குலசேகரப்பட்டினத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மன வேதனையில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் மாதவன் குறிச்சி கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் மணிமுத்து 70 இவருக்கு பகவதி என்ற மனைவியும் 2 மகன்கள் 4மகள்கள் உள்ளனர். இதற்கிடையே இவர் கடந்த சில மாதங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.
இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


