மாப்பிள்ளையூரணி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழர் முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் இ.அர்ச்சுணன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு “தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் அவர்கள் இருந்தபோது 09.10.2023 அன்று பொதுமக்களை திரட்டி, பல வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கும் 90 நபர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி விண்ணப்பம் அளித்தோம். அதன் பின்பு 30.10.2023 அன்று 33 பேர்களின் விண்ணப்பம் அளித்தோம்,
அப்போதைய ஆட்சியர் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் கட்டிவரும் குடிசை மாற்று வாரிய வீட்டில் லோன் வசதி செய்து தருகின்றேன் என்றார். அதற்கு நாங்கள். EMI கூட கட்ட முடியாத நிலையில் மிக ஏழ்மை நிலையில் உள்ளனர் ஆகவே இலவச வீட்டுமனை தாருங்கள் என்று கேட்டோம். சரி தருகிறோம் அதற்கான வேலையை பார்க்கின்றோம் என்று சொன்னார்கள். அதன்பிறகு கலெக்டர் லட்சுமிபதி அவர்களிடம் இரண்டு மனு அளித்தோம். அவரும் இதே போல்தான் பதிலளித்தார் பின்பு மாறுதல் ஆகிவிட்டார்.
பின்பு வந்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகிய தங்களிடம் இதுவரை 12 மனுக்கள் கொடுத்து விண்ணப்பம் அளித்த அனைவருக்கும் இலவச வீட்டு மனை கேட்டு கொடுத்தோம் கயத்தாறு கோவில்பட்டி, ஒட்டபிடாரம் போன்ற பகுதிகளில் இடத்தை தேர்வு செய்து உள்ளீர்கள் மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏழை மக்களுக்கு தயவு கூர்ந்து இலவச வீட்டுமனை வழங்கிட உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நாங்களும் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை விண்ணப்பம் அனுப்பிவிட்டோம்.
ஆனால் மாநில நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இலங்கை அகதிகளுக்கு மனையுடன் கூடிய வீடு இலவசமாக வழங்கப்படுகிறது பூர்வகுடியான எங்களுக்கு ஒரு வீட்டுமனை கூட இந்த அரசு வழங்க யோசிக்கின்றது. ஏற்கனவே பல வருடங்களாக போராடி வருகின்றோம் இன்னும் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் விண்ணப்பம் அளித்த பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


