தென்காசி டி என்.ஜி. ஓ கட்டிடத்தில் ஆசிரியை மாலதி தொகுத்த கவிதை பூங்கொத்து என்னும் கவிதை நூல் வெளியிட்டு விழா நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) பாலசிங் பொன்ராஜ் தலைமை வகித்தார். கடம்பன் குளம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரம், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூல் தொகுப்பாசிரியர் நல்லாசிரியை மாலதி வரவேற்றார். தென்காசி எக்ஸ்னோரா மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி நூலை வெளியிட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்று கொண்டார்.
மூலைக்கரைப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆவுடையப்பகுருக்கள், வீரகேரளம்புதூர் பீனிக்ஸ் யோகா மையம் நிறுவனர் மருதுபாண்டி சிறப்புரையாற்றினர்.
கவிதை எழுதிய ஆசிரியர்கள், கன்னியாகுமரி அரசி குமார், தர்மபுரி காயத்ரி, செங்கல்பட்டு செ.ப. கற்பகாம்பிகை, தர்மபுரி மாலா செந்தில், விருதுநகர் மக«ஸ்வரி, தர்மபுரி சத்யா அருள் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
நல்லூர் சாரல் பதிப்பக நிறுவனர் ராஜ் அந்தோணி நன்றி கூறினார்.


