காசநோயாளிகளின் நலனுக்காக, வல்லநாடு காசநோய் பிரிவிற்கு கடந்த ஐந்து (2017, 2018, 2019, 2020, 2021) ஆண்டுகளாக ஓய்வு பெற்ற *திருநெல்வேலி சாரா தக்கர் கல்லூரி பேராசிரியர்கள் / சாராள் தக்கர் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கம் (Senior Sarahs and Sarah Tucker Old Girls Association – STOGA) சார்பாக கிருஸ்துமஸ் பண்டிகைக்காக காசநோயாளிகளுக்கு நிதி உதவியுடன் கூடிய சத்துணவு, புத்தாடை மற்றும் காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி தொடர்ச்சியாக சேவை செய்து வருகிறார்கள்.
இவர்களின் சேவையை பாராட்டி இந்த ஆண்டு (2022) உலக காசநோய் (மார்ச் 24) தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


