தூத்துக்குடியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை “தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்து கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அருள்ராஜ் மருத்துவமனை கீழே சர்வீஸ் சாலை உள்ளது. இந்த பொதுப்பாதையை மருத்துவமனை நிர்வாகம் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் பாலத்திற்கு கீழே செல்லக்கூடிய பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிறனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பொதுப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


