
நெல்லை தூத்துக்குடி சாலை மிகவும் பிரபலமானது. மிக அதிகமான பயணிகள் பயணிக்கும் இடம். இரண்டு மாவட்ட தலை நகரை இணைக்கும் இடமாக இருப்பதால் இங்கு சாதாரண பேருந்தாக இயங்கும் பேருந்தையும் பாய்ண்ட் டூ பாய்ண்டாக இயக்கி வருகிறார்கள். அனைத்து முக்கிய கிராமங்களிலும் நெல்லை தூத்துக்குடி பேருந்து நின்று செல்ல வேண்டும் என மதுரை உயர் நீதி மன்றத்தில் ஆணை வாங்கியுள்ளார்கள். ஆனாலும் பல பேருந்துகள் பாய்ண்டு டூ பாய்ண்டாக இயங்கி வருகிறது. இதற்கிடையில் தடம் எண் 150 என்று பேருந்து மட்டும் வல்லநாடு வசவப்பபுரம் போன்ற இடங்களில் நின்று செல்லும் பேருந்துகளாகும். ஆனால் அந்த பேருந்துகளும் முறையாக பஸ் நிலையங்களில் நிற்பதில்லை.
22.11.2021 மதியம் தூத்துக்குடியில் இருந்து கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் வசவப்புரத்திற்கு 25 ருபாய் டிக்கெட் எடுத்து பயணித்துள்ளார். வசவப்பபுரம் வந்தவுடன் அவர் எழுந்து நின்று இறங்க வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் பஸ் ஓட்டுனர் மற்றொரு பேருந்தை முந்தும் வேகத்தில் வசவப்பபுரத்தில் நிற்காமல் சென்றுள்ளார். நடத்துனர் விசில் அடிக்க சொன்னால், டிரைவரிடம் கூறுங்கள் என்று சொல்ல, டிரைவரோ யாரையும் கண்டு கொள்ளாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐ.ஐ.பி பள்ளி முன்பு பேருந்தை நிறுத்திவில்லை. மெதுவாக செல்கிறேன் . நீங்களே இறங்கி கொள்ளுங்கள் என மிகவும் கறாக கூறிய டிரைவர் ஓடும் பஸ்ஸில் இருந்தே அவரை இறககி விட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் உதவி பேராசிரியரை மனம் நோகும் படி பேசியும் உள்ளார்.
மன உழச்சலுடன் மூன்று கிலோ மீட்டர் நடந்து வந்த அவர் அதன் பின் வீடு வந்து, அரசு போக்கு வரத்து புகார் கொடுக்கும் வாட்ஸ் அப் எண்ணிலும், கமர்சியல் மேனேஜருக்கும் போனில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் நுகர்வோர் நீதி மன்றத்தினை அவர் அனுக முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே நெல்லை & தூத்துக்குடி சாலையில் ஓடும் மிக அதிகமான அரசு பேருந்து பாய்ண்டு டூ பாய்ண்டு ஆகி விட்டது. அனைத்து பஸ்நிலையத்திலும் நின்று செல்லும் ஒரிரு பேருந்தும் இதுபோல் பயணிகளை உரிய பேருந்து நிலையத்தில் முறைப்படி நிறுத்தாமல் பதம் பார்க்கிறார்கள். கல்வி கற்ற உதவிபேராசிரியர் நிலையே இப்படி என்றால் சாதாரண பாமர மக்கள் நிலை என்னவாகும். இதே போல் பெண்கள் யாரையாவது நடு காட்டுக்குள் இறக்கி விட்டால் யார் பொறுப்பு. எனவே சம்பந்தப்பட்ட ஓட்டுனர் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.