
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை மற்றும் சிவகளை தொல்லியல் கழகம் இணைந்து உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்து வரும் இடத்தினை ஆசிரியர்கள் பார்வையிட்டனர். அங்கு தொல்லியல் அலுவலர் எத்தீஸ் குமார் அனைவருக்கும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து விவரங்களை எடுத்துக் கூறினார்.
ஆசிரியர்கள் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும், முதுமக்கள் தாழிகளையும் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பாளை ஜான்ஸ் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ், முனைவர் கந்தசுப்பு , தொல்லியல் அலுவலர் ராகவேந்திரர், பாரந்தாமன், குமரேசன், ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், நியூஸ் 7 தொலைகாட்சி நிருபர் சுடலைமணி, முனைவர் வேதாச்சலம், தீன் பவுண்டேசன் பாரதி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காரபேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் நி.பார்ஜின், மேல்மாந்தை அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் பொன்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குலசேகரபட்டினம் திரு அருள் மேல்நிலைப்ள்ளி வரலாற்று ஆசிரியர் பழனிசாமி நன்றி கூறினார்.