
கருங்குளத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி ஆறுமுகம்(57). காளிதாஸ் கருங்குளத்தில் உள்ள சந்தனமாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத போது ஆறுமுகம் வீட்டின் உள்ளே இருந்த ஏணிப்படியில் சேலையை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற கணவர் காளிதாஸ் வந்து பார்த்த போது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து செய்துங்கநல்லூரில் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.