குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா நடந்தது.
பிரசித்தி பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
7-ம் திருநாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 6.30 மணி வரை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி வந்தார். மாலை 4.30 மணிக்கு மகிஷாசுரன் வீதி உலா நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 8 மணி வரை சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


