தூத்துக்குடியில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தூத்துக்குடியில் சிவன் கோவில் தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வட பாகம் சந்தன மாரியம்மன் கோவில் மட்டக்கடை உச்சினிமாகாளி அம்மன் கோவில் மேலூர் பத்ரகாளி அம்மன் கோவில் கீழ சண்முகபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் மேல சண்முகபுரம் பத்ரகாளியம்மன் கோவில் டுவிபுரம் சந்தன மாரியம்மன் கோவில் உள்பட 25க்கும் மேற்பட்ட கோவில்களில் தசரா திருவிழா நடைபெற்று வருகிறது.
தசரா திருவிழாவை முன்னிட்டு தினசரி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரணை நடந்து வருகிறது. இதில் தசரா விழாவின் ஏழாவது ஏழாவது நாளான இன்று தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் தொழில் வளம் சிறக்கவும் மலை வளம் வேண்டியும் விவசாயம் செழிக்கவும் அம்மாள் முளைப்பாரி சுமந்து வரும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் இரவு தீபாரணை நடந்தது நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


