செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த 20.9.23 அன்று கனமழை பெய்தது. இதில் செய்துங்கநல்லூர் வசவப்பபுரம் ரோடு பகுதியில் உள்ள கடைகளுக்குள் மழைவெள்ளம் புகுந்து வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதனிடம், செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் அய்யப்பன் தலைமையில் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த 20.09.2023 அன்று செய்துங்கநல்லூரில் பெய்த மழையால் கடைகளுக்குள் மழை நீர் புகுந்து வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே வசவப்பபுரம் ரோட்டில் உள்ள கழிவுநீர் வடிகால்களை சுத்தம் செய்திடவும், ரயில் நிலையம் செல்லும் பிரிவில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


