தூத்துக்குடியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் மாவட்ட நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தூத்துக்குடியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வாரம் தோறும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதில் 332வது வாரமாக தேவர் புரம் ரோட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்ட நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி அரசு வழக்கறிஞரும் டிரஸ்ட் தலைவருமான மோகன் தாஸ் சாமுவேல் தலைமையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி பாக்கியநாதன், சூப்பர்வைசர் ராஜசேகரன் ஆகியோர் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் டிரஸ்ட் உறுப்பினர்கள் கேசவன், ஆனந்த கணேஷ், இம்மானுவேல் ஆசீர், மைக்கேல், ஐயப்பன், மகேஸ்வர சிங், செந்தில், அருண் சங்கர், சோலையப்பன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில தலைவர் மருதப் பெருமாள், செயலாளர் ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


