1823 – யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வோரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.
1916 – கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
1933 – வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.
1962 – நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.
1999 – விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.
2003 – ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
2009 – சூரிய கிரகணம், ஜூலை 22: 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.


